தேர்தல் பரப்புரைக்கு உதயநிதி அழைத்தாரா? நடிகர் சூரி பேட்டி

Actor Soori: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை என நடிகர் சூரி பேட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூரி. நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி ஹீரோவாகவும் திரைப்படங்களில் அவர் கலக்கி வருகிறார். இந்த நிலையில் மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் சூரி கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சூரி பேசுகையில், ”முதல்முறை வாக்காளர்கள் கன்னிச்சாமி போல. கன்னி வாக்கை செலுத்த தயாராக உள்ளனர். கண்டிப்பாக அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நமது வாக்கு சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கு நாட்டின் வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும்.

நமது வாக்கை யாருக்கு செலுத்த வேண்டுமோ அதை கணித்து வாக்கை செலுத்த வேண்டும். கருடன் படம் பணிகள் முடிந்துவிட்டது. விடுதலைக்கு முன்பு கருடன் படம் வெளியாகும். தென்மாவட்டங்களில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள்.

உதயநிதி ஸ்டாலின் என்னை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. நான் படப்பிடிப்பில் பிசியாக உள்ளேன் என அவருக்கு தெரியும். இது நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். நல்லதாகவே நடக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் மகிழ்ச்சியே” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்