தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!
Sivakumar : நடிகர் சிவக்குமார் அடிக்கடிபொது இடத்தில் செய்து வரும் விஷயங்கள் சர்ச்சையாக வெடிப்பது ஒன்று புதிதானது இல்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட ரசிகர் ஒருவர் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்றார். இதனை பார்த்த சிவகுமார் சற்று கடுப்பாகி ரசிகரின் போனை வாங்கி வீசினார். இந்த சம்பவம் அந்த சமயம் பெரிய சர்ச்சையாக வெடித்தது என்றே கூறலாம்.
READ MORE– அஜித்துடன் அதை மறக்கவே முடியாது…புகழ்ந்த சிம்ரன்! சிக்னல் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!
இந்நிலையில், அதனை தொடர்ந்து தற்போது மற்றோரு சர்ச்சையாகும் விஷயத்தை சிவக்குமார் செய்துள்ளார். அது என்னவென்றால், சமீபத்தில் காரைக்குடி மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
READ MORE- நீருக்கடியில் முத்தக்காட்சி…15 நாள் வேதனை- தன்வி நேகி!
அப்போது அந்த விழாவில் வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய கையில் வைத்து இருந்த சால்வை சிவகுமாருக்கு போர்த்திவிட முயன்றார். இதனை பார்த்த சிவகுமார் சற்று கடுப்பாகி சால்வை பிடிங்கி எறிவது போல சில வீடியோ வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை பார்த்த பலரும் பொது இடத்தில் இப்படியா பண்ணுவீங்க? என்று நெட்டிசன்கள் பலரும் கண்டங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து, இதற்கு விளக்கம் கொடுத்து சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது ” காரைக்குடியில் நான் சால்வை எறிந்த வீடியோவை பலரும் பார்த்திருப்பிறீர்கள். அந்த நபர் வேறு யாரும் இல்லை என்னுடைய நெருங்கிய நண்பர் கரீம்.பொதுவாக நான் எதாவது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது எனக்கு யாராவது சால்வ் அணிவிக்க வந்தால், அதனை வாங்கி நான் திருப்பி அவர்களுக்கே போர்த்தி விடுவேன்.
READ MORE – 43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்!
காரைக்குடியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் நான் எல்லாரும் பேசி முடித்த பிறகு தான் பேசினேன் என்று நினைக்கிறன். கிட்டத்தட்ட மணி 10 ஆகிவிட்டது. இதனால் அந்த சமயம் எனக்கு சோர்வாக இருந்தது. அந்த சமயம் தான் எனக்கு கரீம் எனக்கு சால்வ் போட்டுவிட்டான். எனக்கு அது பிடிக்காது என்று தெரிந்து அவன் செய்துவிட்டான். தெரிந்து கொண்டே அவன் அப்படி செய்து இருந்தது தவறு என்றாலும் பொது இடத்தில் நான் அப்படி நடந்து கொண்டது தவறு தான். தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க எனவும் சிவகுமார் தெரிவித்துள்ளார்.