பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்!

Sivakarthikeyan and Vijayakanth

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல் நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பாரதிராஜா, த்ரிஷா, குஷ்பு, விக்ரம், அருண் விஜய், கமல்ஹாசன், அமீர்,  உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்!

அவர்களை தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பது ” தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர்.

அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்