அப்பாவின் பிறந்தநாளன்று மாஸான அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு “வாழ்” தலைப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று அவரின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தந்தையின் பிறந்தநாளான இன்று அவரது ஆசீர்வாதத்துடன், இந்த படத்தின் தலைப்பை அறிவிப்பதாகவும், இப்படத்தின் ரசிகர்கள் தங்களது அனபையும், ஆதரவையும் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
On my Appa’s birthday & with his blessings releasing the first look of our @SKProdOffl ‘s third film #VAAZHL #வாழ் written and directed by my dear thambi @thambiprabu89. Hope you all will give the same love and support like our previous films ???????? pic.twitter.com/8qFMRpQ93l
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 27, 2019