நடிகர் சிவகர்த்திகேயனை கண்கலங்க வைத்த ஒவியம்
“நான் சம்பாதித்து என் அப்பாவிற்கு எதுவுமே வாங்கி கொடுத்ததில்லை” என சிவகார்திகேயன் பல இடங்களில் கூறியிருப்பார். ஒரு விருது விழாவில் அப்பா பற்றி பேசிவிட்டு அவர் கண்ணீர் விட்டது அனைவரையும் உருகியது.
இவர் தொலைக்காட்சியில் பணியாற்றி பின் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் அப்பாவோடு புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ஓவியமாக வரைந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்து எமோஷனலான சிவா, அந்த ரசிகருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். “என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை, இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என அவர் பதிவிட்டுள்ளார்.