தமிழ் சினிமாவின் இன்றைய இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன் என்ற சிம்பு. இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில்,சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வந்தா ராஜாவாக வருவேன்’. இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்,
என்றாலும் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவே இல்லை. இதேபோல் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘முப்ஃடி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக அறிவித்தார். அதுபோக நடிகர் சிம்பு ஐக் இயக்கத்தில் எம்.ஆர்.ராதா பயோபிக் படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியிருப்பதகவும் சொல்லப்பட்டது.இந்நிலையில் இந்த படங்கள் மட்டுமல்லாமல் சிம்பு தற்போது வேறொரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தமிழ் சினிமா வரலாற்றில் பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.எனவே இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் ஏற்கனவே மாஸ் ஹிட் காட்டிய ‘கோவில்’ படத்தில் இணைந்திருந்த நிலையில் அந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU.
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…