‘அந்த மனசு தான் கடவுள்’! வெங்கல் ராவுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் சிம்பு!

Published by
பால முருகன்

சிம்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பல உதவிகளை செய்வது வழக்கம். சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்தால் அவர்களுக்கு பண உதவிகளை சிம்பு செய்து கொடுத்து வருகிறார். குறிப்பாக, மறைந்த நடிகர் தவசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட சிம்பு உதவி செய்தார்.

அதனை தொடர்ந்து, அடுத்ததாக பிரபல காமெடி நடிகரான வெங்கல் ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து சிம்பு உதவி செய்து இருக்கிறார். நகரம், கந்தசாமி, தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார் நடிகர் வெங்கல் ராவ்.

Vengal RaoVengal Rao
Vengal Rao [file image]
சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், நீதி ரீதியாக மிகவும் வறுமையில் இருக்கும் இவருக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய வெங்கல் ராவ் ”  ” எனக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து விட்டது. என்னால் நடக்கவே முடியவில்லை. சரியாக என்னால் வாயை வைத்து கூட பேசமுடியவில்லை. எனக்கு சினிமா தொழிலார்கள், சினிமா நடிகர்கள் எல்லாம் உங்களால் முடிந்த உதவிகளை எனக்கு செய்யுங்கள்.

மாத்திரை வாங்குவதற்கு கூட பணம் இல்லை, மருத்துவமனைக்கு செல்ல கூட என்னிடம் பணமில்லை. ரொம்பவே கஷ்டபடுகிறேன்.எனவே எனக்கு உதவி செய்யுங்கள்” என உருக்கமாக பேசி உதவி கேட்டு இருந்தார். இதனை பார்த்த சிம்பு முதல் ஆளாக தன்னால் முடிந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை அவருடைய சிகிச்சைக்காக கொடுத்து உதவி செய்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

29 minutes ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

37 minutes ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

60 minutes ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

2 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

2 hours ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

2 hours ago