‘தனது பிறந்தநாள் அன்று ட்ரிபிள் ட்ரீட்’… பெரிய அறிவிப்பை வெளியிட்ட சிலம்பரசன்.!
நடிகர் சிலம்பரசன் சிம்புவின் அடுத்த மூன்று திரைப்படங்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ் தளத்தில் சிலம்பரசன் அறிவித்துள்ளார். நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், தனது பிறந்தநாள் அன்று மூன்று படங்கள் வெளியவதாக அறிவித்திருக்கிறார். ஒன்று அவர் இயக்கும் திரைபடம்கும், மற்றொன்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படம். மேலும், இயக்குநர் தேசிங் பெரியசாமியுடன் இணைந்து ‘STR 49’ என்ற தற்காலிக தலைப்பின் கீழ் உருவாகவிருக்கும் திரைப்படமாகும்.
— Silambarasan TR (@SilambarasanTR_) January 27, 2025
இந்த மூன்று படத்தோடு அப்டேட்டும் நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளன்று வெளியாகிறது. இதற்கிடையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் 3வது பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருக்கிறார். அந்த பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.