Siddharth – AditiRao : நடிகர் சித்தார்த்க்கும் நடிகை அதிதி ராவ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வதுவழக்கமான ஒன்று. அந்த வகையில், நடிகர்சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். காதலிப்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தும் விட்டார்கள். ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றாலும் கூட இருவரும் ஒன்றாக தான் சென்றும் வருகிறார்கள்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில் இவர்கள் இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், திருமணம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார்கள். நிச்சயதார்த்தம் செய்தபோது மாற்றிக்கொண்ட மோதிரத்தை காட்டி இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். புகைப்படத்தை வெளியீட்டு இவர்கள் அறிவித்ததன் மூலம் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்ததாக வெளியான செய்தி உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. விரைவில் இவர்களுடைய திருமணம் குறித்த செய்தியும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…