தளபதி 68 படத்தின் அப்டேட்டை வைத்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் “கான்ஜூரிங் கண்ணப்பன்” படத்தின் முதல் பாடலுக்கான ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், தற்போது முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கி, ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கினார். இப்பொது, சதீஷ் ஹீரோவாக தனது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி வருகிறார்.
ஆம்…அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் கூட, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். இந்த நிலையில், படக்குழு வித்தியாசமான பாணியில் படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.
படத்தின் முதல் பாடலுக்கான ப்ரொமோ வீடியோவில், இசையமைப்பாளர் யுவன் மருத்துவராக வருவது போலையும், ஒவ்வொருத்தரும் வந்து எனக்கு அப்படி இப்படினு கூற, அதற்கு யுவன் முன்னதாக பாடியிருக்கும் பாடல்களை கேட்க சொல்லி அறிவுறுத்துவது போல இதுவரை இல்லாத வகையில், படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் பெரிய டிவிஸ்ட் என்ன என்று கேட்டால், இறுதியில் இந்த படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தி கால் செய்வது போலவும் சதீஸிடம் தளபதி 68 அப்டேட் கேட்டதாகவும் கூறி சதீஸ் யுவனிடம், “தளபதி 68 படத்துக்கு பாட்டு ரெடியாக உள்ளதாமே அத என்னனு சொல்லுவிங்களாம் என்று கேட்கிறார்.
பட வாய்ப்பு தான் கேட்டேன் படுக்கைக்கு அழைத்தார்கள்! நடிகை ரெஜினா வேதனை!
அதற்கு யுவன் இல்ல அதுக்கு தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியே காத்திருக்கிறார் அவரிடம் சொல்கிறேன் என்கிறார்” இவ்வாறு சதீஸ் நடித்துள்ள இந்த படத்தை ‘தளபதி 68’ படத்தை எடுத்துக்காட்டாக வைத்து ப்ரோமோஷன் செய்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம், சதீஸ் நடிக்கும் இந்த படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தி தளபதி 68 படத்தை தயாரிக்க, யுவன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 வெற்றி உறுதி! கருங்காலி மாலையை போட்டு களத்தில் இறங்கிய வெங்கட் பிரபு!
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகை ரெஜினா, நாசர், ஆனந்த் ராஜ், சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ராம், ஜேசன் ஷா, பெனடிக்ட் காரெட், நமோ நாராயணா, ஆதித்ய கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…