இயக்குனர் அமீர் சொல்வது உண்மைதான்…அடித்து சொல்லும் நடிகர் சசிகுமார்.!

Ameer - Sasikumar

இயக்குனர் அமீர் நடிகர் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கி கார்த்தியை சினிமாவில் அறிமுகமாக்கினார். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்தும் இருந்தது. இந்த படத்தின் சமயத்திலேயே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதைப்போல தயாரிப்பாளர்  ஞானவேல், அமீர் ஆகியோருக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர்களின் பணத்தை அமீர் திருடுவார் என்று ஞானவேல்ராஜா பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து இதுவரை பேசாமல் இருந்த அமீர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பருத்திவீரன் தொடர்பாகவும் என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும் ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்று கூட உண்மையில்லை. நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும் என்று 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குற்றச்சாட்டுகளுக்கு அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறி, அமீருக்கு ஆதரவாக சசிகுமார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  இது குறித்து சசிகுமார் தனது X தள பக்கத்தில், “அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். ‘பருத்திவீரன்’ இறுதி படப்பிடிப்பிற்கான முழு தொகையை நான்தான் கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யாமலேயே படம் வெளியானது. அமீர் சொல்வது உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

ஞானவேல்ராஜா கூறிய குற்றச்சாட்டு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ”மௌனம் பேசியதே படத்தின் போதே சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது எனவும், அதற்கு காரணம் அவர் சூர்யாவிடம் சரியாக பேசாமல் அவரை சரியாக நடத்திக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

சூர்யாவுக்கு துரோகம் செய்தவர் அவர்! அமீரை கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்!

அது மட்டுமின்றி,பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” எனவும் கடுமையாக தாக்கி பேசினார்.

முற்றுப்புள்ளி வைத்த அமீர்

இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமீர்,  பருத்திவீரன் தொடர்பாகவும் என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும் ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்று கூட உண்மையில்லை. பருத்திவீரன் படம் தொடர்பாக எங்கள் இருவருக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை, முதல்கட்ட படப்பிடிப்புக்கு வழங்கிய தொகையை தவிர அவர் வேறு எந்த தொகையையும் தராமல் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு போனவர் அவர்.

ஞானவேல் சொல்வது உண்மை இல்லை! நான் சொன்னா புயல் கிளம்பிடும்- அமீர்!

“பருத்திவீரன்” படம் தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். பருத்திவீரன் படப்பிடிப்பு சூழல் அறிந்த திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் கலைஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது எனக்கு வியப்பை தருகிறது என்று தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் அமீர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi