நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் சிறப்பாக செயல்பட முடியும் : நடிகர் சரத்குமார்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது என தெரிவித்துள்ளார்.