நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம்! 7 பேருக்கு ஒரு சட்டமா? அற்புதம்மாளின் அதிரடியான கேள்வி !
நடிகர் சஞ்சய் தத் மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிரா அரசு தான் இவரை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய பேரறிவாளனின் தாய், ‘ மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது எப்படி? நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம், 7 பேருக்கு ஒரு சட்டமா?’ என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.