நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் திருமண தேதி வெளியாகியது !!!
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹீரோ. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அஸ்வின் – சவுந்தர்யா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தானது. அஸ்வின் – சவுந்தர்யாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் சௌந்தர்யாவுக்கும் திருமணம் என்ற தகவல் வெளியான நிலையில் தேதி மட்டும் அறிவிக்கபடாமல் இருந்தது. இந்நிலையில் இவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 11ன் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.