நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: முதலவர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வாழ்த்து செய்தி.!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை வாழ்த்து செய்தியை பகிர்ந்து வருகின்றனர் 

rajinikanth - tvk vijay -mk stalin

சென்னை: சூப்பர் ஸ்டார்ப்பி ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது 74 வயதில் 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில், 170 படங்களை கடந்து புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘தளபதி’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், புதுப்படம் ரிலீஸ் போல ‘தளபதி’ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். பல திரையரங்குகளில் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது, இவரது பிறந்தநாளுக்கு  அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை வாழ்த்து செய்தியை பகிர்ந்து வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால், ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும், மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பேரன்பிற்கும், மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன்

நடிகரும் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பலவெற்றிகள் பெறுக, நலம் சூழ்க..மகிழ்ச்சி நிறைக…நீடு வாழ்க” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து

கவி பேரரசு வைரமுத்து  தனது எக்ஸ் பக்கத்தில், “வயிற்றில் தொப்பை சேராத உடலோடும் தலையில் கர்வம் சேராத மனதோடும் அரைநூற்றாண்டாய் ஒரு நட்சத்திரம் உச்சத்தில் இருப்பது அத்துணை எளிதல்ல. சூப்பர் நண்பரே! ஓய்வு குறித்த சிந்தனை உங்களுக்குண்டா? தெரியாது ஓய்வுக்குமுன் இன்னோர் உச்சம் தொடுங்கள் அல்லது இன்னோர் உச்சம் தொட்டபின் ஓய்வு பெறுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
TAMIL NEWS LIVE
Arvind Kejriwal
Deepa koparai (1)
dhanush nayanthara
Red Alert
Vaikom 100 - MK Stalin - Pinarayi Vijayan