உங்க மகனை எனக்கு கொடுங்க! அந்த பிரபலத்திடம் கெஞ்சிய ரஜினிகாந்த்?

rajinikanth

Rajinikanth நடிகர் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்திற்கு மகன் இல்லை. தனக்கு ஒரு பையன் இருந்தால் நன்றாக இருக்கும் என அந்த சமயமே ரஜினிகாந்த் ஆசைபட்டாராம். அப்படி தான் ஒருமுறை பிரபல ஒளிப்பதிவாளரான ஜே. வில்லியம்ஸிடம் அவருடைய மகனை கொடுங்க என கெஞ்சினாராம்.

ஜே. வில்லியம்ஸ் பிரபல சீரியல் நடிகையான சாந்தியை கடந்த 1979-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் கடைசியாக பிறந்தவர் தான் அப்பு என்பவர். 80,90 காலகட்டத்தில் எல்லாம் ஒளிப்பதிவாளரான ஜே. வில்லியம்ஸ் ரஜினி கமல் என பலருடைய படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

அப்படி தான் ஒரு முறை ரஜினிகாந்தின் படத்தில் ஜே. வில்லியம்ஸ் பணியாற்றி வந்தாராம். அந்த சமயம் அவருடைய இளையமகன் அப்புவையும் பட பிடிப்புக்கு அழைத்து வந்தாராம். அந்த சமயம் ரஜினிகாந்த் உனக்கு தான் பசங்கள் நிறைய பேரு இருக்காங்களே எனக்கு இந்த பையனை தத்து கொடு எனக்கு 2 மகள்கள் தான் இருக்கிறார்கள் என்று கூறினாராம்.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

அதற்கு ஜே. வில்லியம்ஸ் அதெல்லாம் கொடுக்க முடியாது நீ கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் கொடுக்கமாட்டேன் என்று கூறினாராம். இந்த தகவலை ஜே. வில்லியம்ஸ் மனைவி சாந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சாந்தி ” என்னுடைய கணவருக்கு பாசம் காட்டவே தெரியாது. என்னுடைய மகன்களே ஏன் இவர் மட்டும் இப்படி இருக்கார்? என்று கூட கேட்பார்கள்.

read more- ஒரே ஒரு படம் தான்! சினிமாவை விட்டே தப்பியோடிய குணா பட நடிகை?

ஆனால், பாசம் மனதிற்குள் இருக்கும் ஒரு முறை ரஜினிகாந்த் சார் ஆசைப்பட்டு என்னுடைய கடைசி மகனை தத்தெடுத்துகிறேன் என்று கேட்டார். அதற்கு என்னுடைய கணவர் நீ எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் சரி நான் என்னுடைய மகனை கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டு மகனை தூக்கிவந்துவிட்டார்” என சாந்தி தெரிவித்துள்ளார்.மேலும் , ஜே. வில்லியம்ஸ்  கடந்த 2005-ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli
annamalai BJP