அபிதாபியிக்கு விடை கொடுத்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!
சென்னை : ஐக்கிய அரபு அமீரகத்தில் 11 நாட்கள் ஓய்வுக்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.
இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் ஷூட்டிங் இம்மாத தொடக்கத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சில நாள்கள் ஓய்வெடுக்க ரஜினி அபுதாபி சென்றிருந்தார்.
அங்கு அவர், கோயிலுக்குச் சென்று வழிபட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. மேலும், அங்கு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது ஐக்கிய அரபு அமீரக அரசு. இந்நிலையில் ‘கூலி’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினி இன்று காலை சென்னை திரும்பினார்.
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரஜினி தனது காரில் ஏறுவதற்கு வரும் வழியில், பெண் ரசிகை ஒருவர் அவரை மறைத்து வணக்கம் வைப்பார். அதனை மதித்து ரஜினியும் வணக்கம் செய்திருப்பார். இது அவரது ரசிகர்களை நெகிழ செய்துள்ளது.
The style samrat back to Chennai after his brief Abu Dhabi tour . Next #Coolie rampage ????????????????????#Vettaiyan | #Rajinikanth | #VettaiyanFromOctober | #Hukum | #CoolieDisco | #CoolieTitleTeaser | #superstar @rajinikanth | #Jailer | #Jailer2 | #SuperstarRajinikanth pic.twitter.com/e2c7rIXyrz
— Suresh Balaji (@surbalu) May 28, 2024
இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘கூலி’. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.