Aadujeevitham Box Office: நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் ‘ஆடு ஜீவிதம்’ 2வது நாளில் ரூ.6.50 கோடி வசூலித்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் கடந்த வியாழன் (மார்ச் 28) அன்று திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் சிறப்பான வரவேற்பை பெற்று மலையாள பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜூக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது.
முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.7.6 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. முதல் நாளில் உலக அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.16.7 கோடி வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்றைய தினம் விடுமுறை என்பதால், ரூ.15 கோடி வசூல் செய்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக முழுவதும் மொத்தம் ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் தொடர் விடுமுறை என்பதால், இன்னும் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…
அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…
பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…