நடிகர் பிருத்விராஜ்-க்கு காலில் காயம்…இன்று அறுவை சிகிச்சை.!

prithviraj accident

மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்து வரும் ‘விலயாத் புத்தா’ படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார். விபத்தில், அவரது காலில் காயம் ஏற்பட்டதால், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் குணமடையும் வரை, சில வாரங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது. கொச்சின் மறையூரில் புது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிருத்விராஜின் காயம் முழுமையாக குணமடைய சுமார் 2 முதல் 3 மாதங்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் அல்லது மருத்துவமனை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை.

அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய மறைந்த இயக்குனர் சச்சியிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஜெயன் நம்பியார் இயக்கும் படம் தான் விலாயத் புத்தா. விலையத் புத்தர் என்பது ஜி.ஆர்.இந்துகோபனின் அதே பெயரில் நாவலின் பெரிய திரை தழுவல் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்