நடிகர் பிரசன்னாவுக்கு குவியும் பாராட்டு மழை….!!!
நடிகர் பிரசன்னா எப்பொழுதுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடித்துள்ள திருட்டுப்பயலே-2 படம் விருதுகளை வாங்கி கொடுத்துள்ளது. இவருக்கென்று ரசிகர்களும் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்திகேயனையும், இவரையும் ஒப்பிட்டு மோசமான கருத்தை பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர். அதற்க்கு நடிகர் பிரசன்னா மிக பக்குவமான முறையில் பதில் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இவரை பாராட்டியுள்ளனர். இதனால் பிரசன்னா மிகவும் சந்தோசப்பட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து எத்தனை பேர் அவருக்கு கமெண்ட் செய்தாலும் அவர் மிக நிதானமாக பதில் அளிக்கிறாராம்.
source : tamil.cinebar.in