கல்யாண செலவுக்கு கஷ்டப்பட்ட பொன்னம்பலம்! கேப்டன் செய்த பெரிய உதவி!

ponnambalam about vijayakanth

கேப்டன் விஜயகாந்த் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் அவர் தங்களுக்கு செய்த உதவிகளை பற்றி பேசி வருகிறார்கள். மேலும் சில முன்னதாக கொடுத்த பேட்டிகளும் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், பேட்டி ஒன்றில் விஜயகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த பொன்னம்பலம் விஜயகாந்த் தனக்கு செய்த உதவி பற்றி பேசியுள்ளார்.

ஒரு முறை எந்த படம் என்று தெரியவில்லை கேப்டனின் படத்தின் சண்டை காட்சிக்காக ஹிந்தி வில்லன்ஒருவர் வரவில்லை. எனவே, அந்த ஹிந்தி வில்லன் வரவில்லை என்பதால் விஜயகாந்த் ஷூட்டிங் கேன்சல் பண்ணிவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் நான் வெளியே ஒரு ஓரமாக பாக்கு போட்டுகொண்டு துப்பிக்கொண்டு இருந்தேன்.

சோறு போட்டு அழகு பார்த்த தாய்! கதறி அழுத எம்.எஸ்.பாஸ்கர்!

நான் பாக்கு போட்டு துப்பிக்கொண்டதை விஜயகாந்த் பார்த்துவிட்டு
யாரு இவரு? ஆள் வருவதை கூட பாக்காமல் இப்படி கண்ட எடத்துல துப்பிக்கிட்டு இருக்கான்? என்று கேட்டார். அதற்கு விஜயகாந்தின் உதவியாளர் ‘அந்த ஹிந்தி வில்லனுக்கு டூப் போட வந்தவரு இவர் தான் என்று கூறினார். அதற்கு கேப்டன் விஜயகாந்த் இவரையே நடிக்க சொல்லு. ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என்று கூறி எனக்கு பட வாய்ப்பு கொடுத்தார்.

பிறகு அடுத்த சில மாதங்கள் கழித்து என்னுடைய தங்கைக்கு கல்யாணம் வைத்திருந்தேன். 19 -ஆம் தேதி கல்யாணம். 16 ஆம் தேதி ஷூட்டிங் ஒன்றில் அவரை சந்தித்தேன். கல்யாணம் வைத்து இருக்கும் விஷயத்தை அவரிடம் சொன்னேன். என்னடா ‘கல்யாண செலவுக்கு உதவி வேணுமா?’என்று கேட்டார். அதற்கு நான் ‘பாதிக்கு மேல் சமாளித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது’ என்று கூறினேன்.

பிறகு அவர் என்ன யோசித்தார் என்று தெரியவில்லை. எங்கள் இருவருக்குமான அந்த படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி சில வாரங்கள் கழித்து எடுக்க வேண்டியது. ஆனால் கேப்டன் இயக்குனரிடம் பேசி அந்த சண்டைக்காட்சியை 18 ஆம் தேதி இரவு அந்த ஷூட்டிங்கை வைக்க சொன்னார்.

பகல் முழுவதும் வேறு படத்தில் நடித்துமுடித்துக்கொடுத்துவிட்டு இரவில் என்னுடன் சண்டை போடும் காட்சியில் நடித்தார். பிறகு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு, உடனே மண்டபத்திற்கு வந்து என்னை பார்த்தார்.இதில் 50,000 இருக்கு. உன்னோட சம்பளம் என்று கூறினார். அந்த நேரத்தில் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்றுமே நான் கேப்டனை மறக்கவே மாட்டேன்” என கண்ணீருடன் பொன்னம்பலம் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
santhanam and str
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu
edappadi and amit shah Nainar Nagendran
ADMK MP Thambidurai say about ADMK - BJP Alliance
d jeyakumar about bjp
Mitchell Starc About RR