மனநலம் பாதிக்கப்பட்ட பிரபல காமெடி நடிகர்..!
பாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர்சித்தார்த் சாகர் கடந்த நான்கு மாதங்களாக காணவில்லை. அவரை பற்றி குடும்பத்தாரிடம் கேட்டாலும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில் சித்தார்த் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் என் குடும்பத்தார் என்னை மனரீதியாக கொடுமைபடுத்தினார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் நானே உங்கள் முன்பு வந்து அனைத்து உண்மையையும் தெரிவிக்கிறேன் என்றார்.
இந்த நிலையில் அவர், எங்கள் வீட்டில் சொத்து பிரச்சனை இருப்பது தெரியாது. சில காரணங்களால் என் பெற்றோர்கள் பிரிந்து வாழ்கின்றனர், சமீபத்தில் என் தாய் வாழ்க்கையில் சுயாஷ் என்பவரும் வந்தார்.
எனக்கு பைபோலார் பிரச்சனை இல்லை. அப்படி இருந்தும் என் பெற்றோர் பைபோலார் குறைபாட்டிற்கான மருந்தை உணவில் கலந்து எனக்கு கொடுத்து வந்துள்ளனர்.
சுயாஷும், அம்மாவும் சேர்ந்து என்னை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டனர்.
அங்கு நான் அணுபவிக்காத கஷ்டமே இல்லை. இங்கிருந்து என்னை அழைத்துச் செல்ல பெற்றோர்களிடம் எவ்வளவோ கேட்டேன் என்று சித்தார்த் கூறியுள்ளார்.