நடிகர் மயில்சாமி உடல் மின் மயானத்தில் தகனம்.!

Default Image

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் வடபழனி ஏ.வி.எம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானார். இவருடைய திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய உடல் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,  தமிழ் திரையுலகப் பிரமுகரகள், அரசியல் கட்சித் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, நடிகர் மயில்சாமியின் இறுதி  ஊர்வலம் காலையில் ஆரம்பித்த நிலையில், திரையுலகினர், மக்கள் என பலர் அலை அலையாய் திரண்டு கண்ணீர் மல்க தங்களுடைய  இரங்கலை தெரிவித்தனர். மேலும் அவரது உடலானது வடபழனியில் இருக்கும் இடுகாட்டில் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்