சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாதாரணமாக இருக்கும்போதும் சரி, படப்பிடிப்பின் போதும் சரி எப்பொழுது அமைதியாகவே இருப்பார். ஒருவருடம் கூட கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். நடிகர் என்பதை விட மிகவும் எளிமையான மனிதர் ரஜினிகாந்த் என்று அவருடன் நடித்த பல பிரபலங்களும் பேட்டிகளில் கூறிவது உண்டு.
அந்த வகையில், நடிகர் மூணார் ரமேஷ், ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சினிமாவில் நான் வியந்து பார்த்த ஒருவர் ரஜினிகாந்த். சிவாஜி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது, நான் ஒரு சீனில் நடித்தேன். அப்போது ஒரு கூட்டம் தலைவா தலைவா என்று பயங்கர சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.”
“தலைவர் அவர்களின் முன்வந்து கையை காட்டியதும் அனைவரும் அமைதியாக ஆகிவிட்டார். அதைக் கேட்கும் பொழுது அப்பொழுது எனக்கு கண்களை விட்டது அவர் மேல் எப்படி ஒரு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று. படித்தவர்கள். படிக்காதவர்கள். பணக்காரர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல், அவர் மீது ஒரு ஈர்ப்பு உள்ளது. அது அவருக்கு நாளுக்கு நாள் கூலிக் கொண்டே தான் போகிறது”
“இதனால் அவரை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. மேலும், நான் பத்து வயதில் இருந்து ரஜினி ரசிகன். ரசிகன் என்பதை விட ரஜினி வெறியன். இன்று வரை அவருடைய ஒரு படத்தை கூட பார்க்க நான் தவறியதில்லை. அவரைப் பற்றி பேசாமல், அவருடைய வசனத்தை உச்சரிக்காமல் இத்தனை வருடங்களாக இருந்ததில்லை” என்று கூறினார்.
நடிகர் மூணார் ரமேஷ் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் மூணார் ரமேஷ், குணச்சித்திரம் மற்றும் வில்லன்கள் கதாபாத்திரங்கள் நடித்து பெயர் பெற்றவர். குறிப்பாக தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் இப்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நடிக்காமல் இருக்கிறார்.
மேலும், நடிகர் ரஜினி காந்த் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய டிஜி ஞானவேல் இயக்கத்தில், தலைவர் 170 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …