மகனுடன் சொத்துப் பிரச்சினை: மைக்கை பிடுங்கி பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டிய நடிகர் மோகன் பாபு!

அவரது மகன் மஞ்சு மனோஜ் உடன் ஏற்பட்டுள்ள சொத்துத் தகராறு குறித்து பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கச் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Mohan Babu Hyderabad

ஐதராபாத்: ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, அவரது மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் பரபரப்பு புகார் அளித்துள்ளார்

சொத்து தகராறில் மோகன் பாபு தன்னையும், தன் மனைவியையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக, மனோஜ் தாக்கியதாக, மோகன் பாபு புகார் அளித்திருந்தார். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மனோஜ் தனது ஆதரவாளர்களுடன் நேற்றிரவு மோகன் பாபு வீட்டின் கதவை திறந்து செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த மோகன் பாபுவும், பவுன்சர்களும் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களின் மைக்கை பிடுங்கி ஆக்ரோஷமாக தாக்கினர். இது தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில், மோகன் பாபு மற்றும் பவுன்சர்களின் தாக்குதலில் கேமராமேன் ஒருவர் கீழே விழுந்தார். மேலும், பௌன்சர்கள் செய்தியாளர்களை வெளியே தள்ளிவிட்டு வீட்டின் பூட்டினர். இந்த தகராறு பெரிதாகும் என்பதால், முன்கூட்டியே மோகன் பாபு வீட்டிற்கு தனிப்படை போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்