நடிகர் மன்சூர் அலிகானுக்கு அடுத்த சிக்கல்…நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்?
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, மன்சூர் அலிகானை கைது செய்து விசாரிக்கலாமா அல்லது விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பலாமா என காவல்துறையினர் ஆலோசித்து வந்தநிலையில், மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்ப சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் “ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். அதைப்போலவே, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை திரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை” என பேசியிருந்தார்.
கண்டனம்
த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் இப்படி பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.
த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்!
தேசிய மகளிர் ஆணையம்
த்ரிஷா பற்றி ஆபாசமாக மன்சூர் அலிகான் பேசியதற்கு புகார் எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்டது.
காமெடிக்கு இப்படியா பேசுறது? மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாரதிராஜா வலியுறுத்தல்
வழக்குப்பதிவு
ஏற்கனவே, தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதன் பெயரில் த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது பேச்சு, செயல் மூலம் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் (IPC 354 a), பெண்களை அவமதிக்கும் விதத்தில் பேசுவது (IPC 509) ஆகிய 2 பிரிவுகள் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
காவல்துறை நோட்டீஸ்?
நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய விவகாரத்தில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நேரில் அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.