நடிகர் கார்த்தியின் அதிரடி அறிவிப்பு! உழைக்கும் உழவனுக்காக ஒரு போட்டி! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர் உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பை துவங்கியுள்ளார்.
நடிகர் கார்த்தி எப்பொழுதுமே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டவர் என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது இவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், உழவை எளிதாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் ஒரு போட்டியை நடத்துகிறார்.
இந்த அறிவிப்பின் படி சிறு குறு விவசாயத்தை எளிதாக்கும் வகையில், புதிய கருவிகளை கண்டுபிடிபவர்களுக்கு உழவன் பவுண்டேசன் மூலம் ரூ.1.5 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சிறு குறு விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டி…
இத்தகவலை சமூக வலைத்தள நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். pic.twitter.com/oYFuFochSt— Uzhavan Foundation (@UzhavanFDN) July 3, 2019