japan movie [File Image]
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவம்பர் 10ஆம் திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா என்று பார்த்தால், தொடக்க நாளிலியே நெகடிவ் விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றே சொல்லலாம்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிகர் கார்த்திக்கு இது அவருக்கு 25 படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால், ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஜப்பான் திரைப்படத்தின் திரைக்கதையில் இயக்குனர் இன்னும் மெனக்கெட்டு இருந்தால் படம் வெற்றி அடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தை பிரபல OTT தளமான நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளதாம்.
எப்பொழுதும், ஒரு படம் வெளியாகினால் அது குறைந்தது 30 நாட்களாவது திரையரங்குகளில் ஓடிய பின்னரே ஓடிடியில் ரிலீஸாகும். அந்த வகையில், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போட்ட பணம் திரும்ப வருமா.? ஏக்கத்தில் ஜப்பான் தயாரிப்பாளர்.! 4 நாள் வசூல் இவ்வளவு தான்…
இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் படத்துக்கு வந்தது நெகடிவ் விமர்சனம், திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் குறைந்துவிட்டது. இதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…