நீண்ட நாள் காதலி மோனிகாவை கரம் பிடித்தார் நடிகர் கவின்! குவியும் வாழ்த்துக்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகர் கவின் கடைசியாக டாடா எனும் பிளாக் பஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக கலக்கி வருகிறார். அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் கவின் விரைவில் தனது காதலியை திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போது தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை கவின் திருமணம் செய்துகொண்டார். கவின் திருமணம் செய்துள்ள அந்த பெண் தனியார் பள்ளி ஆசிரியர். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையில் இருக்கும் சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.