Categories: சினிமா

நடிகர் தனுஷின் 51வது படத்தின் அறிவிப்பு வெளியானது!

Published by
கெளதம்

தனுஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணையும் தனது 51 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷுக்கு நாளை 40 வயதாகிறது என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவர் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதற்கிடையில், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் விரைவில் துவங்குமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனுஷின் 51வது படமாக உருவாகிறது.

Dhanush51 [Image source : Twitter/
@dhanushkraja]

அதாவது, பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இயக்கும் தனது புதிய படத்திற்காக தனுஷ் இணைந்த செய்தி ஏற்கனவே வெளியானது. தற்போது, அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது வெளியான டைட்டில் லுக் போஸ்டரில், ‘டி51’ என்ற தற்காலிகத் தலைப்புடன் கரன்சி நோட்டுகளால் வகுக்கப்படும் குடிசைப் பகுதி மற்றும் நகர்ப்புறம் காட்டப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்க பழம்பெரும் நடிகர் நாகார்ஜுனா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகு நடிகர்கள் மற்றும் படக்குழு குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.

ஏற்கனவே கோடி படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் அரசியல்வாதியாக அதுவும் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறி வைத்தது ஏன்? மனம் திறந்த திலக் வர்மா!

சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த…

10 hours ago

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டம்! மக்கள் மீது பதியப்பட்ட வழக்கு வாபஸ்!

சென்னை : மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு…

12 hours ago

வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர்…வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.…

12 hours ago

“நான் ஆணையிட்டால் “…சாட்டையுடன் விஜய்! ஜனநாயகன் படத்தின் அடுத்த போஸ்டர்!

சென்னை :  விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல்…

12 hours ago

வேங்கைவயல் விவகாரம் : உயர் நீதிமன்ற சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்!

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும்…

13 hours ago

“பெரியார் மண் அல்ல பெரியாரே ஒரு மண்ணுதான்”…சீமான் ஆவேச பேச்சு!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேசிய விஷயங்கள் இன்னும் சர்ச்சையில் உள்ளது. தொடர்ச்சியாக…

15 hours ago