நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்! தூக்கத்தில் பிரிந்த உயிர் ..சோகத்தில் திரையுலகம்!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.

RIP Delhi Ganesh

சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில் ராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு தூங்கும் போதே அவரது உயிர் பிரிந்ததாக தெரியவந்துள்ளது.

இவரது மறைவால் ஒட்டுமொத்த திரைத்துறையும் சோகத்தில் இருந்து வருகிறது. மேலும், சமூக வலைதளைத்தில் திரைத்துறை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இன்னாரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என அவரது மகன் மகாதேவன் செய்தியர்களிடம் தெரிவித்துள்ளார். சாதாரண ஒரு நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் பின் சினிமா துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்து 400-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் போன்ற பல பரிமாணங்களில் நடித்து தன்னை பிரபலபடுத்திக் கொண்டார்.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல்மதன காமராஜன், அவ்வை ஷண்முகி போன்ற பல படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

சமீபத்தில் கூட அரண்மனை-4, இந்தியன்-2 உள்ளிட்ட படங்களில் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆபரே நடிப்பின் மூலம் கடந்த 1979ம் ஆண்டு ‘பசி’ திரைப்படத்திற்கு “தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

மேலும், 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இன்னாரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என அவரது மகன் மகாதேவன் செய்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்