நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

bonda mani

நகைச்சுவை நடிகர் போண்டா மணி  நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 60. தமிழ் சினிமாவில் பவுனு பவுனுதான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் முத்து, அருணாச்சலம், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை, சச்சின், ஆறு, உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகளை எல்லாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே கூறலாம்.

குறிப்பாக இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்த ‘ஆறு’ படத்தின் காமெடி காட்சிகள் மற்றும் ‘கண்ணும் கண்ணும்’ திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த அடிச்சு கேட்டாலும் யாருகிட்டயும் சொல்லாதீங்க காமெடி காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படி பல காமெடி காட்சிகள் போண்டா மணியை நம் நினைவுக்கு கொண்டு வந்து இருக்கும்.

இந்நிலையில், இப்படி பல காமெடி காட்சிகளில் நடித்து நம்மளை சிரிக்க வைத்த போண்டாமணி நேற்று இரவு பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். கடந்த றுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்தனர்.

அதனை தொடர்ந்து இரண்டு சிறுநீரகங்களும் அவருக்கு செயலிழந்தால், மாதத்திற்கு  ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் போண்டமானி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  போண்டாமணியின் மறைவுக்கு ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date