குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!
நேற்று இரவு சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்துக்குள்ளானது. இதில் குடிபோதையில் இருந்ததாக ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டார்.

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார் ஓட்டுநர் கைது செய்யப்ட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் பாபிசிம்ஹாவின் வீடு மணப்பாக்கத்தில் இருக்கிறது. நேற்று இரவு பாபி சிம்ஹாவின் சொகுசு காரை எடுத்துக்கொண்டு ஓட்டுநர் புஷ்பராஜ் வெளியில் சென்றுவிட்டு பிறகு மணப்பாக்கம் வீடு நோக்கி திரும்ப வந்துள்ளார். அப்போது, சென்னை ஆலந்தூர் கத்திப்பாரா பாலம் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்தில் சிக்கியுள்ளது.
இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். 6 வாகனங்கள் சேதமடைந்தன. விபத்து குறித்த செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் புஷ்பராஜை கைது செய்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஓட்டுநர் புஷ்பராஜை கைது செய்த போலீசார் நடிகர் பாபி சிம்ஹாவின் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025