விடாமுயற்சியை நடு ரோட்டில் விட்டுவிட்டு.. கார் ரேஸில் பறக்க நடிகர் அஜித் திட்டம்!
ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ அல்லது பைக்கோ பிடித்துவிட்டால், உடனே அதை வாங்கிவிடுவார். அடிக்கடி, தனது விடுமுறை நேரத்தில் பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது, ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் குமார், படத்தில் தனது பகுதிகளுக்கான போர்ஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதனால், இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
இந்த நேரத்தில், நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்திற்கு செல்லவுள்ளதாக தெரிகிறது. ஆம், வருகின்ற 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு (FMSCI) தெரிவித்துள்ளது.
View this post on Instagram
இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா & மத்திய கிழக்கு நாட்டு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில், முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தனது இன்ஸ்டாவில், “விரைவில் துபாயில் நடைபெறவுள்ள ஜி.டி.ரேசிங் போட்டியில் அஜித் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும்” அவர் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், போர்ச் GT3 RS ரக காரை அஜித் வாங்கியிருந்தார். முன்னதாக, ஃபார்முலா 2 பந்தயத்தில் பங்கேற்பதற்காக தனது திரையுலக வாழ்க்கையை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.