நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடல் விமர்சனம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர், எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் அகலாதே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் கணவன்-மனைவி இடையேயான உறவை விவரித்து கூறுவதாக உள்ளது. கணவன் மனைவியிடம் ஒரு நொடி கூட என்னை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும். என் வாழ்வில், நடுவில் வந்த உறவு என்றாலும், நெடுந்தூரம் வருபவள் நீதான். என் குறைகள் நூறை மறந்து, எனக்காக தன்னை அர்பணித்தவள் என்று கணவன் மனைவியை புகழும் விதத்தில் பாடலில், இடம் பெற்றுள்ள வரிகள் அமைந்துள்ளது.
இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடல், தனக்கே உரித்தான முறையில், மெலோடி பாடலாக உருவாக்கி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025