தன்னை அஜித், அஜித்குமார் என்றோ அல்லது AK என குறிப்பிட்டோ அழைத்தால் போதும். தல எனும் பட்டம் கொண்டோ அல்லது வேறு பட்டங்கள் கொண்டோ அழைக்க வேண்டாம் – அஜித்குமார் வேண்டுகோள்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் அவரது கதாபாத்திரத்தை ஒரு துணை அஜித்தை தல என அழைத்திருப்பார். அந்த தல எனும் பட்டம் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது.
அன்று முதல், தற்போது வரை தல அஜித் என்றே ரசிகர்கள் முதல் திரைபிரபலன்கள், பத்திரிக்கையாளர்கள், இணையவாசிகள் என அனைவரும் அழைக்க தொடங்கிவிட்டனர். தளபதி விஜய் – தல அஜித் என்கிற ஆரோக்கியமான போட்டி கோலிவுட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித்குமார் தனது பி.ஆர்.ஓ மூலம் தகவல் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது, ‘ தன்னை அஜித், அஜித்குமார் என்றோ அல்லது AK என குறிப்பிட்டோ அழைத்தால் போதும். தல எனும் பட்டம் கொண்டோ அல்லது வேறு பட்டங்கள் (அல்ட்மேட் ஸ்டார் எனும் பட்டத்தை மங்காத்தா ரிலீஸ் சமயத்திலே விட்டுவிட்டார்) கொண்டோ அழைக்க வேண்டாம் எனவும், அனைவருக்கும் ஆரோக்கியம், வெற்றி, மன அமைதி, மன நிறைவு என அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள்.’ எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
தல எனும் பட்டம் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனியையும் ரசிகர்கள் அழைப்பதுண்டு. அதன் காரணமாக சில சமயம் இணையத்தில் சச்சரவுகள் கூட அவ்வப்போது ஏற்படும்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…