‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடலை அருமையாக பாடிய ரசிகர்.! வியந்து கேட்டு ரசித்து நடிகர் அஜித்…
துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் ரசிகர் ஒருவர் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" பாடலைப் பாடியதைக் கண்டு நடிகர் அஜித்குமார் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
துபாய் : ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற பாடலை ரசிகர் ஒருவர் தன்னிடம் பாடி காட்ட அஜித், அதனை ரசித்து கேட்டார். சமீபத்தில், துபாயில் நடந்த 24எச் பந்தயத்தில் அஜித்குமார் மூன்றாம் இடம் பெற்றார். துபாய் கார் பந்தய வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் போர்ச்சுகலுக்குப் புறப்பட்டு, தகுதிச் சுற்றில் பங்கேற்றார்.
இந்த நிலையில், துபாயில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் அன்பான ரசிகர் ஒருவரை சந்தித்திருக்கிறார் நடிகர் அஜித். அந்த ரசிகர், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற அஜித்தின் பாடலை அசத்தலாக பாட, புன்னகையுடன் வியந்து கண்டு கழித்து மகிழ்ந்தார் அஜித். இந்த வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ரசிகர் பாடுவதில் மூழ்கிப்போன அஜித், கைகளால் கண்களை முடி ரசித்து கேட்டார். பொறுமையாக அவர் பாடுவதை கேட்டு முடித்துவிட்டு, ரசிகரை கைத்தட்டி பாராட்டினார். கடைசியாக அஜித் ரசிகருக்கு கை கொடுக்க போய், உங்க பெயர் என்ன என்று கேட்க? ரசிகரும் அஜித் என கூற, உடனே அஜித் கொடுத்த ரியாக்சன் வேற லெவல் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
Latest Video Of THALA #AjithKumar From Dubai! 🌟🇦🇪
A Lucky Fan Pays Tribute To AK By Singing A Song From Kandukondain Kandukondain 🎶
What A Moment To Cherish! ❤️#VidaaMuyarchi | #GoodBadUgly pic.twitter.com/b4sS5U4mva
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) January 25, 2025