அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!
துபாயில் அஜித் குமார் சென்ற ரேஸ் கார், விபத்தில் சிக்கி தாறுமாறாக சுழன்றது. பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவருக்கு காயம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சர்ரென சுழன்று… சுழன்று நின்றது.
உடனே அங்கிருந்த முதலுதவி செய்பவர், அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. நெஞ்சை பதற வைக்கவும் அந்த கோர காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோக்களை பார்த்து அஜித்தின் ரசிகர்கள், ‘இந்த கார் ரெஸ் எல்லாம் வேண்டாம்’ என கோரிக்கையுடன் குமுறுகின்றனர்.