இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அதன் பிறகு வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து தற்போது தனக்கென்று ரசிகர்கள் கூட்டம் ஒன்றையும் உருவாக்கி வைத்துள்ளார்.
இவர் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தபோது ரசிகர் மன்றம் இருந்தது. இருந்தாலும் ரசிகர்கள் மன்றம் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். அப்படி இருந்தும் மன்றமே இல்லாமல் இவருக்கு இப்படி ஒரு ரசிகர் பட்டாளமா என்று சக நடிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.
இந்நிலையில், இன்று நடிகர் அஜித்குமார் தனது 53 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதை முன்னிட்டு #HBDAjithkumar என்ற ஹேஷ்டேக்கையும் #HBDThalaAjithKumar என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். எக்ஸ் வலைதளத்தில் ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
மேலும், அதற்கு முதலில் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் அவர் நடித்த பில்லா மற்றும் தீனா ஆகிய படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அதேபோல குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். எனவே இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படங்களில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.