Categories: சினிமா

AK64 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்? இது என்னங்க புது கதையா இருக்கு!

Published by
பால முருகன்

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் (அக்டோபர்) தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, அஜித்தின்63-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தை விடுதலை திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ்இன்ஃபோ டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கீழ் எல்ரெட் குமார் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், தற்போது அஜித்தின் 63-வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படம் வெளியான பிறகு அவருடைய 63-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகராக இருக்கும் ஆதிக் அவரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ள தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதற்கிடையில், அஜித்தின் 64-வது திரைபடம் குறித்தும் ஒரு வதந்தி தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், அஜித்தின் 64-வது திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளாராம். இந்த படத்தையும் ஆர்எஸ்இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். ஆனால், இந்த தகவல் முற்றிலும் வதந்தியாக இருக்க வாய்ப்புள்ளது.

ஏனென்றால், வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தையும் வடசென்னை 2 ஆகிய படங்களை இயக்கவிருக்கிறார். இத்தகைய சூழலில் அவர் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக பரவி வரும் தகவலுக்கு காரணம் வெற்றிமாறன் கொடுத்த பேட்டி தான்.

ஒரு பேட்டியில் வெற்றிமாறன் அடுத்த படம் பற்றி தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு வெற்றிமாறன் ஆர்எஸ்இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்திற்கு மற்றோரு படம் செய்து கொடுக்க போகிறேன் என்று கூறியுள்ளார். இத்தனையும், அஜித் ஆர்எஸ்இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள தகவலை ஒப்பிட்டு செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

28 minutes ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

1 hour ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

2 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

4 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

4 hours ago

நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…

4 hours ago