Ajith Kumar: நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான முழுமையான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இப்பொது சென்னையில் இருக்கும் அவர், படப்பிடிப்புஅஜர்பைஜானில் நடந்து வந்து வரும் நிலையில், வருகின்ற 15 ஆம் தேதி விடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், தனது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் அஜித்குமார் சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை வீடு திரும்புவார் என அஜித்குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…