நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் அதிரடி டீசர் வெளியீடு.!
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நாகசைதன்யாவின் ‘கஸ்டடி’ படத்தை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்க படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
தற்போது, இப்படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது, படத்தில் நாகசைதன்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீசரில் அதிரடி போலீசாராக கலக்கியுள்ளார். மேலும், வில்லனாக மிரட்டும் அரவிந்த் சாமி மற்றும் சரத்குமாரும் இடம்பெற்றுள்ளன.
நாகசைதன்யாவின் படங்களிலேயே அதிக பொருட் செலவில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாலும், படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருவதாலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.