ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது தெரியவந்துள்ளது. ஆம்… அண்மைய காலமாக, அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவின் காதல் குறித்த வதந்திகள் பரவி வந்தது.
அதாவது, தம்பி ராமையாவின் மகனை காதலித்து வருவதாகவும், பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது, இவர்களது இருவரின் குடும்பத்தாரும் ஓகே சொல்லிவிட்டதால் அவர்கள் திருமணம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அந்த வகையில், இணையத்தில் பரவிய காதல் மற்றும் டேட்டிங் வதந்திகளும் உண்மையாகி உள்ளது. அட மாங்க… இருவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் முன்னிலையில், இன்று ஐஸ்வர்யா – உமாபதி நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது, அது குறித்த தகவல் அவர்களே வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, தந்தையின் வழியை பின்பற்றி திரைத்துறையில் நுழைந்தார். அவர் 2013ல் விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் அவர் தனது தந்தை இயக்கிய மற்றும் எழுதிய கன்னட காதல் நாடகமான ‘பிரேமா பரஹா’ என்ற படத்தில் முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் இந்த படத்திற்கு ‘சொல்லிவிடவா’ என்று பெயரிடபட்டுள்ளது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் விஜய்க்கு சித்தப்பாவாக ஹரோல்ட் தாஸ் என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…