ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நம்ம விமர்சனத்தை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
மிகப்பெரிய எதிர்ப்புக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி எல்லா மொழிகளில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. தமிழில் மட்டும் படத்தின் டிரைலர் 26 மில்லியனை தாண்டி உள்ளது .
அதைப்போல லைக்குகளிலும் டிரைலர் சில சாதனைகளை படைத்தது வருகிறது. வெளியான 24 மணி நேரத்திற்குள் 2.4மில்லியன் லைக்குகளை பெற்ற தமிழ் டிரைலர் இது தான் என்ற சாதனையை படைத்துள்ளது. தெலுங்கில் 4.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 40 லட்ச லைக்குகளை பெற்றுள்ளது. இது 24 மணிநேரத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற தமிழ் டப் டிரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.
கன்னடத்தில் 60 லட்சம் பார்வையாளர்களை பெற்று 1 லட்ச லைக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறது. ஹிந்தியில் 3. 6 மில்லியன்பார்வையாளர்களை பெற்று 36 லட்ச லைக்குகளை குவித்துள்ளது. மொத்தமாக வெளியான 24 மணி நேரத்திற்கு முன்பே இப்படி எல்லா மொழிகளுக்கும் படத்தின் ட்ரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் படம் கண்டிப்பாக வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள காரணத்தால் அங்கும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…