தமிழ் முதல் ஹிந்தி வரை அதிரடி! ‘லியோ’ டிரைலர் செய்த தரமான சம்பவம்!

Leo Trailer

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நம்ம விமர்சனத்தை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மிகப்பெரிய எதிர்ப்புக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி எல்லா மொழிகளில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. தமிழில் மட்டும் படத்தின் டிரைலர் 26 மில்லியனை தாண்டி உள்ளது .

அதைப்போல லைக்குகளிலும் டிரைலர் சில சாதனைகளை படைத்தது வருகிறது. வெளியான 24 மணி நேரத்திற்குள் 2.4மில்லியன் லைக்குகளை பெற்ற தமிழ் டிரைலர் இது தான் என்ற சாதனையை படைத்துள்ளது. தெலுங்கில் 4.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 40 லட்ச லைக்குகளை பெற்றுள்ளது. இது 24 மணிநேரத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற தமிழ் டப் டிரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.

கன்னடத்தில் 60 லட்சம் பார்வையாளர்களை பெற்று 1 லட்ச லைக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறது. ஹிந்தியில் 3. 6 மில்லியன்பார்வையாளர்களை  பெற்று 36 லட்ச லைக்குகளை குவித்துள்ளது. மொத்தமாக வெளியான 24 மணி நேரத்திற்கு முன்பே இப்படி எல்லா மொழிகளுக்கும் படத்தின் ட்ரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் படம் கண்டிப்பாக வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள காரணத்தால் அங்கும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்