ஆடையே இல்லாமல் நடிச்சாச்சு…இதெல்லாம் ஒரு விஷயமா..? ‘லிப் லாக்’ காட்சி குறித்து அமலா பால்.!!
நடிகை அமலா பால் தற்போது நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு ஜோடியாக “ஆடுஜீவிதம்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. சமீபத்தில் கூட இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
டிரைலரில் வரும் சில காட்சியில் அமலா பால் லிப் லாக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த முத்தக்காட்சியில் நடித்ததற்காக காரணத்தை மனம் திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அமலா பால் ” படத்தில் அந்த காட்சி தேவை பட்டிருந்தது. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் படத்தில் முத்த காட்சியில் நடித்திருந்தேன். படத்தின் கதையை சொன்னபோது லிப்லாக் காட்சி இருப்பதை சொல்லிவிட்டார்கள்.
ஆடை படத்தில் நிர்வாணமாக கூட நடித்தேன். கதைக்கு அது தேவையாக இருந்தது. எனவே, அதனை ஏற்ப நடிப்பதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. ஆடையே இல்லாமல் நடித்த எனக்கு லிப்லாக் காட்சியில் நடிப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை” என பேசியுள்ளார்.