நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு சாதனையாளர் விருது.!
நடிகை, இசையமைப்பாளர் , பாடகி என பன்முக திறமைகள் கொண்ட 00 தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இவருக்கு ‘பவர் காரிடார்ஸ் இந்திய சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு சேவை செய்ய முன்வந்தவர்களின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் வழங்கப்படும் ‘பவர் காரிடார்ஸ் இந்திய சாதனையாளர் விருது இந்த வருடம் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விருதை வாங்கிவிட்டு ஸ்ருதிஹாசன் பேசிய ” இதுபோன்ற சேவைகளை செய்ய திரைத்துறையை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது . இந்த விருதை பெற்றதில் ரொம்பவே மிகவும் மகிழ்ச்சி. கலைப் பணிக்காக பாராட்டப்படுவது, எப்போதுமே பணிவானது.நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.