நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.
படத்தை பார்த்துவிட்டு பலர் நெகடிவ் விமர்சனங்களை கூறினர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் பஜ்ரங்தள் அமைப்பு நயன்தாரா மீது, புகார் அளித்ததது.
இதனையடுத்து, தெற்கு மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் மார்க் காவல் நிலையத்தில் இந்து ஐடி பிரிவு நிறுவனர் ரமேஷ் சோலங்கி இரண்டாவது புகார் அளித்தார். இந்த படம் ராமரை இழிவுபடுத்துவதாகவும், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே வெளியிடப்பட்டதாகவும் சோலங்கி குற்றம் சாட்டியுள்ளார்.
‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் இருந்து அதிரடி நீக்கம்.!
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதனால், நேற்றைய தினம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.தற்பொழுது, அன்னபூரணி படத்தின் சில காட்சிகள் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மீரா-பயந்தரைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவர், நயா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், நயன்தாரா உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்னபூரணி
அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில், நடிகை நயன்தாரா நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்தார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…