குவியும் வழக்கு: அன்னபூரணியால் அப்செட்டில் நயன்தாரா?

annapoorani - nayanthara

நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

படத்தை பார்த்துவிட்டு பலர் நெகடிவ் விமர்சனங்களை கூறினர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் பஜ்ரங்தள் அமைப்பு நயன்தாரா மீது, புகார் அளித்ததது.

இதனையடுத்து, தெற்கு மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் மார்க் காவல் நிலையத்தில் இந்து ஐடி பிரிவு நிறுவனர் ரமேஷ் சோலங்கி இரண்டாவது புகார் அளித்தார். இந்த படம் ராமரை இழிவுபடுத்துவதாகவும், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே வெளியிடப்பட்டதாகவும் சோலங்கி குற்றம் சாட்டியுள்ளார்.

‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் இருந்து அதிரடி நீக்கம்.!

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதனால், நேற்றைய தினம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.தற்பொழுது, அன்னபூரணி படத்தின் சில காட்சிகள் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மீரா-பயந்தரைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவர்,  நயா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், நயன்தாரா உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்னபூரணி

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில், நடிகை நயன்தாரா நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter