குலசாமி குறும்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்!
பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் குலசாமி. இப்படத்தை பாக்கியராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லயோலா கல்லூரியை சேர்ந்த கிஷோத் என்ற மாணவன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் சாதியால் மனிதம் அளித்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் சமீபத்தில் யூடியூப் இணையத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது. இப்படம் சாதியால் மனித இனம் எவ்வாறு அழிந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுவதால், பல திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர் நகுல் ஆகியோர் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.